பேரவையின் துணை அமைப்பான "இந்தியப் பேனாநண்பர் பேரவை சதுரங்க கழகம்".
பேரவையின் அங்கீகரிக்கப்பட்ட துணை அமைப்பான இந்தியப் பேனாநண்பர் பேரவை சதுரங்க கழகம் PL CHESS ACADEMY 2004 ஆம் ஆண்டு முதல் சிறப்புடன் செயல்பட்டு கிராமப்புற மாணவர்கள் மத்தியில் பெரும்புகழ் பெற்று விளங்குகிறது.
"இந்தியப் பேனாநண்பர் பேரவை சதுரங்க கழகத்தின் சிறப்பு அம்சங்கள்"
♦ ஐபிஎல் சதுரங்கப் போட்டி
♦ ஐபிஎல் செஸ் லிருதுகள் வழங்கல்
♦ ஐபிஎல் செஸ் சிறப்பிதழ் வெளியீடு
♦ பெற்றோர்களை சிறப்பித்தல்
♦ பயிற்சியாளர்களை சிறப்பித்தல்
♦ பள்ளிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கல்
♦ நலஉதவிகள் வழங்கல் என சதுரங்கத் திருவிழா நிகழ்வுகள் அமையும்.
கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டில் ஆர்வத்தைத் தூண்டி, ஊக்குவித்து சதுரங்கச் சாதனையாளர்களாக அவர்களை உருவாக்கும் வகையில் ஐபிஎல் செஸ் அகாடமி சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி தான் ஐபிஎல் சதுரங்கத் திருவிழா.
பேரவையின் வெள்ளிவிழா ஆண்டில், இன்னும் பல சதுரங்கச் சாதனையாளர்களை உருவாக்கும் சாதனை முயற்ச்சிக்குப் பக்கபலமாக விளங்க பாவூர்சத்திரம் தொழிலதிபர் திரு. ஆர்.கே. காளிதாசன், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேனிலைப் பள்ளி தாளாளர் திருமிகு. எம். திவாகரன் ஆகியோரை அவர்கள் ஒப்புதலுடன் IPL CHESS ACADEMY யின் மூத்த ஒருங்கிணைப்பாளர்களாக { Sr. COORDINATORS} பேரவையின் நிர்வாகக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.
மா. கருண், தலைவர்,
இந்தியப் பேனாநண்பர் பேரவை சதுரங்கக் கழகம்,
மும்பை.