பேரவை நண்பர்கள் - பேரவைச் சிறப்பு :
இன்று (04.12.2021) தர்மபுரியில் நடைபெற்ற "தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுனர் பேரவை" { டான்சாஃப் } Tamilnadu Senior Agro Technologists Forum அமைப்பின் 35 வது பொதுக்குழுக் கூட்டத்தில் நமது பேரவைத் துணைத்தலைவர் முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ் அவர்கள் மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு [2022 - 2025 ] செயலாளராகவும், கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவை நண்பர் திரு வி. குப்புசாமி, மீண்டும் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட இந்தியப் பேனாநண்பர் பேரவைக்கிளை அமைப்பாளர் மா. மோகன் அவர்கள் டான்சாஃப் மாநிலத்தலைவர் என் ஆர் ஆறுமுகம் அவர்களால் பயனாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார்.
நமது பேரவை நண்பர் ஆர். பெரியசாமி மற்றும் வேளாண்துறை சார் அறிஞர்கள் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
புதிய நாட்காட்டியும் நிகழ்வில் வெளியிடப்பட்டது.
கலந்து கொண்ட அனைவரிடமும் நமது இந்தியப் பேனாநண்பர் பேரவையின் கொள்கைகள், பன்முகச் செயல்பாடுகள், சர்வதேச அளவில் அறிமுகச் சிறப்பு பற்றி நண்பர் வி. குப்புசாமி அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தார்.