அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு - டிசம்பர் 2021
  • கிருஷ்ணகிரி

இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.

கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளைச் செய்தி - 19.12.2021.

பேரவைத் தலைவர் மனிதநேய மாமணி  மா.கருண் அவர்கள் நல்லாசியுடன் துணைத்தலைவர் முனைவர் சி.சிவ.பிரேம்பிரகாஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு ஓசூர் காமராஜ் நகர் சுவாதி பள்ளியில், பேரவை நண்பர் பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்கள் தலைமையில்,  திரு. சி. காமராஜ் அவர்கள்  முன்னிலையில் சிறப்புடன் நடைபெற்றது. நமது அன்பிற்குரிய பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் காணொளி மூலம், மாவட்டப் பேரவை நண்பர்களுக்கு  வாழ்த்து தெரிவித்து  பாராட்டினார்.

பேரவைத் துணைத்தலைவர் முனைவர் திரு.சி.சிவ.பிரேம்பிரகாஷ் அவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து,  அனைவரையும் வரவேற்றார்.


சிறப்புமிகு இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.

• நமது பேரவைத் தலைவர்(நிறுவனர்) மனிதநேய மாமணி உயர்திரு மா.கருண் அவர்களின் கடுமையான உழைப்பையும், பேரவை வளர்ச்சிக்கு எடுக்கும் முயற்சிகளையும், பேரன்புடன் கிருஷ்ணகிரி மாவட்ட பேரவை கிளை    அங்கிகரிப்பதோடு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

• பேரவையின் சிறப்பான உறுப்பினர் திருமதி மீனாட்சி அவர்களை, அவரது பல்வேறு மனிதநேய பணிகளுக்காக நமது கிளை பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

• நமது உறுப்பினர் திரு.எ.ராஜா அவர்களின் புதல்வர் சதிஷ்குமார்   திருமணத்திற்கும் மற்றும் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் பள்ளி தாளாளர் திரு.சரவணன் அவர்களுக்கும் அனைத்து உறுப்பினர்களும் மனமார வாழ்த்துகிறோம்.

• உடல் நலம் குன்றி அறுவை சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கும் நமது உறுப்பினர் திரு.ஆறுமுகசாமி அவர்களின் மகன் திரு.விக்னேஷ் அவர்கள் பூரண நலம் அடைய கிளை வேண்டிக்கொள்கிறது.

வரும் 23ஆம் தேதி நடக்கவிருக்கும் நமது பொருளாளர் செல்லத்தம்பி அவர்களின் புதல்வர் திருமணத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் மனமார வாழ்த்துகிறோம்.

வரும் ஜனவரி 17-ஆம் தேதி நடக்கவிருக்கும் நமது பொதுச்செயலாளர் அவர்களின் புதல்வர் திருமணத்திற்கு நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.

• ஒவ்வொரு மாதமும் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் நண்பர்களை குடும்பத்துடன் கூட்டத்திற்கு அழைத்து வாழ்த்துக்களை தெரிவிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

• அவ்வப்போது முடிந்தவரை மனிதநேய பணிகள் மேற்கொண்டு பேரவைக்கு பெருமை சேர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நமது பெருமைக்குரிய உறுப்பினர் பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்கள் தனது உடல் தான வடிவத்தை இன்று சமர்ப்பித்தார்.

• விசேஷ நாட்களில் ( பிறந்தநாள் மற்றும் திருமணம்) பேரவைக்கு நன்கொடை அளிக்க நண்பர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

• பேரவை குடும்ப தளத்திலும், கிளை தளத்திலும் தவறாமல் பங்கேற்று சிறப்பு சேர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

• கூட்டத்திற்கு வராமலும், ஈடுபாடு இல்லாமலும், தொடர்பு இல்லாமல் இருக்கும் உறுப்பினர் உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்ய செய்யப்படுவார்கள் என்று  தெரிவிக்கப்படுகிறது.

• உறுப்பினர் கட்டணம் அடையாள அட்டை கட்டணம் செலுத்தாத நண்பர்கள் உடனடியாக கட்டணம் செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.

• புதிய நண்பர்களை இணைக்கும் போது, நமது பேரவையின் கொள்கை கோட்பாடுகளை தெரிவித்து, உடன்படுவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

• இனிவரும் காலங்களில் ஓசூர் மக்கள் சங்கத்துடனமும் இணைந்து சமுதாயப் பணிகளை செய்வது என தெரிவிக்கப்படுகிறது.

• ஓசூர் ஓசூர் சங்கத்தில் Employment Exchange -ன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.நந்தகுமார் அவர்களை இக்கூட்டம்  மனதார பாராட்டுகிறது.

• வரும் 2022 ஜனவரி மாதம் சிறப்பு கூட்டம் நடத்தி பேரவை நாள்காட்டி வழங்கப்படுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

• நமது பேரவையில் மிகுந்த ஈடுபாடும் சிறப்பான ஒருங்கிணைப்பை செய்து வந்த திரு.நந்தகுமார் அவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பாளராக செயல்பட ஒப்புதல் அளிக்க வேண்டும் என தலைவரை கேட்டுக் கொள்ள ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

• நமது பேரவையின் உறுப்பினர் மருத்துவர் பி.பிரேமஜீவிதா,BDS அவர்கள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சிகிச்சை முகாம் நடத்த ஒப்புக் கொண்டதை பேரவைகளில் மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறோம்.

கிருஷ்ணகிரி மாவட்டக் கிளைக்கு தொடர்ந்து கூட்டம் நடத்திட ஓசூர் மக்கள் சங்கத்தின் கூட்ட அரங்கினை அளித்து உதவியுள்ள நமது பேரவை நண்பர் ஓசூர் மக்கள் சங்கத்தின் தலைவருமான டாக்டர் M P  சரவணன் அவர்களுக்கும், செயலாளர் திரு.காமராஜ் அவர்களுக்கும்,  இந்தியப் பேனாநண்பர் பேரவை சார்பில் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.

பாவலர் கருமலைத்தமிழாழன் நன்றியுரையாற்ற,    நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

தலைமை ஒப்புதலுடன்

அன்புடன்,

நந்தகுமார் எ.