இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.
o நிர்வாகக்குழு / அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து நண்பர்களின் பேரவை ஈடுபாடு.
o வெள்ளிவிழா சங்கமம் குறித்து சென்னை அமைப்பாளருடன் கலந்தாய்வு.
o இந்தியப் பேனாநண்பர் பேரவை மாநில / மாவட்டக் கிளைகளின் உயிரோட்டம் குறித்த தலைமையின் கருத்துகள்.
தலைவர் அனுமதியுடன் பிற விவாதங்கள்.
இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187
பேரவை மும்பை நிர்வாகிகள் மற்றும் மும்பை உறுப்பினர்கள் சந்திப்பு 19. 12. 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நமது தலைமை அலுவலகத்தில் பேரவைத் தலைவர் திருமிகு. மா. கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.* பொதுச்செயலாளர் ஜெ. ஜாண்கென்னடி வரவேற்புரையாற்றி நிகழாவை துவக்கி வைத்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, சென்னை மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் திரு. ரெ. சுரேஷ், சென்னை நண்பர் திரு. ம. செல்வசதீஷ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அவர்களுக்கு பேரவைத் தலைவர் பொன்னாடை அணிவித்து வரவேற்பும், வாழ்த்தும் தெரிவித்தார்.
தீர்மானங்கள்:
==============
o நிர்வாகக்குழு / அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து நண்பர்களின் பேரவை ஈடுபாடு மற்றும் செயல்பாடுகளில் இன்னும் அதிகமான ஆர்வம் தேவையென வலியுறுத்தப்பட்டது.
o திருவாரூர், நாமக்கல் மாவட்டக்கிளை மற்றும் அமைப்பாளர்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டக்கிளை, கோவை மண்டலக்கிளை, கேரளா மாநிலக்கிளை மூன்றும் தொடர்பு நிலைகளிலும், செயல்திறனிலும் கேள்விக்குறியாகவே உள்ளது.இம்மாத இறுதிக்குள் செயல்பாடுகளை சீரமைத்து செயல்பட கேட்டுக் கொள்ளப்பட்டது.
o அனைத்து பேரவைக்கிளைகளிலும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி தகுதியான உறுப்பினர்கள் பட்டியல் தலைமைக்கு அனுப்ப வேண்டும்.
o வெள்ளிவிழா சங்கமம் {21-22 மே 2022} குறித்த முன்னேற்பாடுகள் பற்றி சென்னை அமைப்பாளர் விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து தலைமையின் அறிவிப்புகள் மூலம் நண்பர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்படும்.
o சங்கம பங்கேற்புக் கட்டணம், பேரவை உறுப்பினர்களுக்கு ₹ 1500/_, குடும்ப உறுப்பினர்களுக்கு ₹ 2000/_, உறுப்பினரல்லாதவர்களுக்கு ₹ 2500/_ எனத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
o 2022 பெப்ரவரி மாதத்திற்குள் பங்கேற்புக் கட்டணம் செலுத்தி பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். சங்கம விழா குறித்து மேலும் விவரங்கள் வேண்டுமாயின் பேரவைத் தலைவர் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
o சங்கம சிறப்பு மலருக்கான செய்திகள், புகைப்படங்கள், விளம்பரங்களை விரைந்து அனுப்பிட அமைப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
o மூன்று ஆண்டுகளுக்கான உறுப்பினர் கட்டணம் (மார்ச் 2025 வரை) , அடையாள அட்டை கட்டணம் ₹ 120/_ செலுத்தி சங்கம விழாவில் புகைப்பட அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.
o 23.12.2021 மும்பையில் பேரவைப் பொருளாளர் கோ. செல்லத்தம்பி இல்ல மணவிழாவிலும்...... 17.01.2022 நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பேரவைப் பொதுச்செயலாளர் இல்ல மணவிழாவிலும் பேரவைக் குடும்ப நண்பர்கள் திரளாகக் கலந்து சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
o கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் பரிந்துரை ஏற்று நண்பர் எ. நந்தகுமார் அவர்கள் மாவட்டப் பேரவைக்கிளை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படுகிறார்.
பொருளாளர் கோ. செல்லத்தம்பி நன்றியுரையாற்ற, தேநீர் விருந்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
ஜெ.ஜாண் கென்னடி
பொதுச்செயலாளர்
21. 12. 2021