நாகர்கோவிலில், மும்பை இந்தியப் பேனாநண்பர் பேரவையின் கன்னியாகுமரி மண்டலக்கிளை நண்பர்கள் சந்திப்பு, மண்டல அமைப்பாளர் தா. தேவதாஸ் இல்ல வளாகத்தில், பேரவைத் தலைவர் மா. கருண் தலைமையில் நடைபெற்றது.
பேரவையின் சிங்கப்பூர் அமைப்பாளர் இரா. வினோத் சிறப்பு விருந்தினராகக் கலந்து வாழ்த்துரை வழங்கினார்.
மண்டலக்கிளை புரவலர் மருத்துவர் மா. நெடுஞ்செழியன், மண்டலக்கிளை நண்பர்கள் எம். பொன்னையன், திருமதி பி. தங்க நாடாச்சி, திருமதி சி. ராஜம்மாள், திருமதி எஸ். பரமேஸ்வரி, பி. ஜேசுராஜ், என். சுப்பிரமணியன், பி. ராஜு, அ. ரெஜின் பரத், சி. முருகேசன், இரா. தனசிங், திருமதி. தா. ஜெனிலா. ஏ. ராஜகோபால், அனீஷ் பிரசாந்த், தா. நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
நண்பர் ஆர். அந்தோணி ஜார்ஜ் ராஜ் அவர்களின் துணைவியார் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்ட அளவில் நீராதாரத்தைப் பாதுகாக்கும் செயல்முறைத் திட்டங்களில் மாவட்டக் கிளைக்கு பேரவைத் தலைமை ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென. நண்பர் சி. முருகேசன் கோரிக்கை வைத்தார்.
மண்டல அளவிலான பேரவை வளர்ச்சி, நண்பர்கள் தினம் - 2022, வெள்ளிவிழா சங்கமம் குறித்து நண்பர்களின் கருத்துகளைத் தலைவர் கேட்டறிந்தார்.
ஜி. ஜெயகர்ணன், திருமதி சியா ரெஜின் ஆகியோர் பேரவைக் குடும்பத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர்.
திருமதி தா. ஜெனிலா நன்றியுரையாற்ற, தேநீர் விருந்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
தா. தேவதாஸ், அமைப்பாளர்
07.02.2022.