இந்தியப் பேனா நண்பர் பேரவை. மும்பை. 9892035187.
கரூர் மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு 01.01.2022 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கரூர் சீனிவாச புரம் திருக்குறள் பேரவை மாவட்டப் பேரவைக்களை அமைப்பாளர் இரா. திருமூர்த்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பேரவை உறுப்பினர், தமிழ்ச் செம்மல் மேலை. பழனியப்பன் அவர்கள் இந்தியப் பேனாநண்பர் பேரவை, மும்பை, கருவூர் திருக்குறள் பேரவை, இரு அமைப்புகளின் 2022 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி களை வெளியிட்டு அனைவருக்கும் வழங்கினார்.
நிகழ்வில் நமது பேரவைக்கிளை செயல்பாடுகள், மாவட்ட நண்பர்களின் பேரவை ஈடுபாடு குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
நண்பர்கள் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்ந்தனர். பேரவைக்கிளை சார்பில் தை1ல் (14.1.2022) வெள்ளியனை ராகவேந்திரா ஆதரவற்றோர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுடன்" சமத்துவப் பொங்கல் விழா "கொண்டாடுவது எனவும், பேரவை பொதுச் செயலாளர் மகன் திருமணவிழாவில் [ திசையன்விளை. 17.1 .2022 ] அதிகப்படியான நண்பர்கள் கலந்து கொள்வது எனவும் , பேரவை வாட்சப் தளத்தில் இணைந்திருந்து பதிவுகள் செய்து நட்பு பாராட்டி பேரவைக்குடும்ப உறவை மேம்படுத்தி மகிழ்ந்திருப்பது எனவும், உறுப்பினர் தகுதி / புகைப்பட அடையாள அட்டை கட்டணங்களை இம்மாத நிறைவுக்குள் அனைவரும் பேரவை தலைமையகத்திற்கு செலுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
நண்பர்கள் அனைவரும் பேரவையின் நட்புறவால் அடைந்த பயன்களை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினர்.
நண்பர்கள் பா.கி. தங்க ராசு , கு.பரணிதரன், ரஞ்சித் குமார், நாகேந்திர கிருஷ்ணன், மூங்கில்ராஜா, மா. கண்ணதாசன், க.நா.சதாசிவம், ஜெயபிரகாஷ், தே. ரவிக்குமார் சிவசண்முகம் குருஜி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இனிப்புகள், தேநீர் அருந்தி நண்பர்கள் நட்புச் சந்திப்பை மகிழ்வுடன் நிறைவு செய்தனர்.
வாழ்க வளத்துடன்,
இரா. திருமூர்த்தி
கரூர் மாவட்டக்கிளை அமைப்பாளர்
இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை.
01. 01. 2022