தமிழியக்கம் அமைப்பின் வட இந்திய ஒருங்கிணைப்பாளர் மா. கருண் - டிசம்பர் 2019
நட்பு உறவுகளுக்கு வணக்கம்,
தமிழ்நலம், தமிழர்நலம் என்ற இலக்கோடு, உலகில் உள்ள அனைத்துத் தமிழர் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒரு குடையின்கீழ் ஒருங்கிணைத்து ஒல்லும் வகையில் செல்லும் வழியெல்லாம் தமிழினம் வெல்லும் வகையில் செயலாற்றும் தமிழியக்கம் அமைப்பின் வட இந்திய ஒருங்கிணைப்பாளர் என்ற மதிப்புமிகு பொறுப்புக்கு வி.ஐ.டி வேந்தர், தமிழியக்கம் அமைப்பின் நிறுவனர்- தலைவர் கோ. விசுவநாதன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளேன்.
மரியாதைக்குரிய வேந்தர் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் மகிழும் வகையில் வட இந்திய மாநிலங்களில் தமிழியக்கம் வலுவுடன் பலம பெற எனது பணிகள் தொடரும்.
மா. கருண்.
நிறுவனர்-தலைவர்,
இந்தியப் பேனாநண்பர் பேரவை, மும்பை.