அன்பு, நட்பு, மனிதநேயம் என் மந்திரச் சொற்களை முழுமூச்சாக கொண்டுள்ள இந்திய பேனாநண்பர் பேரவையின், விருதுநகர் மாவட்டக்கிளை 2022 ம் ஆண்டு நண்பர்கள் சந்திப்பு, சிவகாசி அசோக் காலண்டர் காம்ளக்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பேரவை நண்பர்கள் அ. இன்னாசி முத்து, ஆர். எஸ். நாகராஜன், பி. பாக்கியராஜ், எம். மாரி முத்து, டி. கருப்பசாமி, எஸ். சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நண்பர்கள் ஜெ. கதிர்வேல் மற்றும் வி. சுந்தராஜன் நிகழ்ச்சி சிறக்க வாழ்த்தினார்கள். பேரவையின் முக்கிய நிகழ்வுகள் பற்றியும் கலந்து உரையாடினோம். கொரானா பெரும் தொற்று காரணமாக நீண்ட இடை வெளிக்கு பிறகு நண்பர்களை நேரில் சந்தித்தது மனம் நிறைவை தந்தது. பேரவை வளர்ச்சி, நட்புச் சங்கம விழா, நண்பர்கள் தினம்-2022 பற்றி பேசினோம்.
பேரவை நண்பர்களின் குடும்ப நிகழ்வுகள் மற்றும் நமது பொதுச்செயலாளர் இல்ல மணவிழாவில் கலந்து கொள்வது பற்றியும் கலந்துரையாடினோம். ஏற்பாடுகளை அமைப்பாளர் எம். மாரிமுத்து செய்திருந்தார்.
07. 01. 2022