அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
மும்பை நிர்வாகிகள் மற்றும் மும்பை உறுப்பினர்கள் சந்திப்பு - பிப்ரவரி 2022
  • மும்பை

இந்தியப் பேனாநண்பர் பேரவை மும்பை  நிர்வாகிகள் மற்றும் மும்பை  உறுப்பினர்கள் சந்திப்பு, தலைமை  அலுவலகத்தில் பேரவைத் தலைவர் திருமிகு. மா. கருண் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.

பேரவைத் தலைவர் தலைமையில், கோவை, குமரி மண்டலப் பேரவைக்கிளைகளில் நடைபெற்ற பேரவை  நண்பர்கள் சந்திப்பு பற்றிய விவரங்களை பேரவைத் தலைவர் எடுத்துரைத்தார்.

17.01.2022, பொதுச்செயலாளர் இல்ல மணவிழாவில் பங்கேற்று மகிழ்ந்த திரளான பேரவைக் குடும்ப  உறவுகளுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது..

வெள்ளிவிழா சிறப்பு மலரில் நண்பர்கள் புகைப்படத்துடன் இடம் பெறும் முகவரிப் பட்டியலில், பேரவை ஈடுபாடு இல்லாத மெம்பர்களைப் புறந்தள்ளி, ஈடுபாடு காட்டி தொடர்பில் இருக்கும் நண்பர்களின் முகவரிகள் மட்டுமே இடம் பெறும் வகையில்  முகவரித் தொகுப்பு   நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டது.

வெள்ளிவிழா சங்கம சிறப்புமலர் - விளம்பரங்கள், வாழ்த்துச் செய்திகள்,  பேரவைக்கிளை செய்திகள்,  பேரவைக் குடும்ப செய்திகள்  சிறப்புடன் இடம்பெற அனைத்து அமைப்பாளர் களும்  தங்கள் மாவட்டக்கிளை செய்திகள் அனைத்தையும் தொகுத்து மார்ச் 15 ஆம் தியதிக்குள் தலைமைக்கு அனுப்பிட கேட்டுக் கொள்ளப்பட்டது.

அனைத்து மண்டல, மாவட்டக் கிளைகளிலும் மாதந்தோறும் தொடர்ந்து  நண்பர்கள் சந்திப்பு நடத்தி தலைமைக்கு அறிக்கை அளிக்கவேண்டும் என்பது கண்டிப்புடன் வலியுறுத்தப் பட்டது. தொடர்ந்து  3 சந்திப்புகளில்  தகுதியான காரணமின்றி கலந்து கொள்ளாதவர்களை உறுப்பினர் தகுதி நீக்கம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

வெள்ளிவிழா நட்புச் சங்கம பங்கேற்புக் கட்டணம்  ₹ 1500/_ வீதம் மார்ச் 25ம் தியதிக்குள் அமைப்பாளர்களிடம் செலுத்தி உறுதி செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

பேரவைத் தலைவர் அவர்கள், புதிய உறுப்பினர் எஸ். கோபால் ராஜா அவர்களை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, பொன்னாடை அணிவித்து  வாழ்த்து தெரிவித்தார்.

நண்பர்கள் தினம் ( 12 மார்ச் ) சிறப்பு நிகழ்ச்சியாக,   மான்கூர்டு மன வளர்ச்சி குன்றியோர் காப்பகத்திற்கு [ 300 பேர் ] மருந்துகள், அவர்கள் கேடுக்கொண்டபடி வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது. மாலையில் பேரவைக் குடும்ப விருந்து நிகழ்வும் நடைபெறும்.

குமரி மண்டலப் பேரவைக்கிளை அமைப்பாளர் தா.தேவதாஸ், கேரளா பேரவை நண்பர் எம்‌. ரமேஷ் இருவரும் இணைந்து, பரிந்துரைத்து  அனுப்பியுள்ள மருத்துவ உதவிக்கான விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ₹ 10000/_ வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.

பொதுச்செயலாளர் பரிந்துரையுடன் வந்துள்ள கல்வி உதவித்தொகை வேண்டிய விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.புரவலர் ம. செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் பா. மலர்விழி  ஆகியோர் உதவிகளுக்கான தங்கள் பங்களிப்பை உறுதி செய்தனர். மனிதநேய உணர்வுடன் பேரவைக்குடும்ப உறவுகள் உதவிடக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

கடந்த இரு மாதங்களில் பேரவைக் குடும்பங்களில் ஏற்ப்பட்ட ஈடு செய்ய இயலா இழப்புகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.             பொருளாளர் கோ. செல்லத்தம்பி நன்றியுரை வழங்க, தேனீர் விருந்துடன் நிகழ்வு நிறைவுற்றது.

14. 02. 2022.