அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு - பிப்ரவரி 2022
  • கிருஷ்ணகிரி

பேரவைத் தலைவர் மனிதநேய மாமணி மா.கருண் அவர்கள் நல்லாசியுடன் துணைத்தலைவர் முனைவர் சி.சிவ.பிரேம்பிரகாஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு, ஓசூர் சுவாதி பள்ளி கூட்ட அரங்கில்,  பேரவை நண்பர் பெருமதிப்பிற்குரிய பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நமது அன்பிற்குரிய பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள்,பொதுச்செயலாளர் ஜெ. ஜாண் கென்னடி, மும்பை நண்பர் எஸ். கோபால் ராஜா ஆகியோர் காணொளி மூலம், மாவட்டப் பேரவை நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவித்து  பாராட்டினர்.

பேரவைத் துணைத்தலைவர் முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ் அவர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்றார்.

வெள்ளிவிழா (21 மே 2022) சங்கம நிகழ்வுகள், சிறப்பு மலர் குறித்து நண்பர்கள் கருத்து தெரிவித்தனர். சிறப்புமலருக்கான விளம்பரங்களை அதிக அளவில் பெற்றுத்தருமாறு நண்பர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

 சங்கம விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்வது என்று  தீர்மானிக்கப்பட்டது. சங்கம விழாவின் பெருமைகளை, தனது  பங்கேற்பு  அனுபவங்களை பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்கள் சிறப்புடன் பகிர்ந்து கொண்டார்.

வரும் 12.03.2022  நண்பர்கள் தினம் (பேரவையின் 28ஆவது ஆண்டு தொடக்கவிழா) மாவட்டக்கிளை சார்பில்  சிறப்புடன் கொண்டாடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

மனிதநேயப் பணிகளைத் தொடர்ந்து செய்து வரும் நமது கிளை உறுப்பினர்  திருமதி.என். மீனாட்சி அவர்களுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

திருமணநாள் கொண்டாடிய நண்பர் கணேஷ் பிரபு தம்பதியருக்கு, பேரவை சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து, அன்பு பரிசு அளித்து மகிழ்ந்தோம்.   

கடந்த நாட்களில் பிறந்தநாள் கண்ட  நண்பர்கள் திரு. அ.க. இராசு,  திரு. சி. காமராஜ்,   திரு. அ. வேடி, திரு. பி. சுப்பு சிங் ஆகியோருக்கு பேரவை சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்து, அன்பு பரிசு அளித்து மகிழ்ந்தோம்.

வரும் 06.03.2022 அன்று மும்பையில் நடைபெறவுள்ள மும்பை நண்பர் எஸ். கோபால் ராஜா இல்ல மண விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.*

பாவலர் கருமலைத்தமிழாழன் நன்றியுரையாற்ற, தேனீர் விருந்துடன்  நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

தலைமை ஒப்புதலுடன்

நந்தகுமார் எ., மாவட்டக்கிளை ஒருங்கிணைப்பாளர்.

முனைவர் சி.சிவ. பிரேம் பிரகாஷ், துணைத்தலைவர்.

மா.மோகன், கிளை அமைப்பாளர்.

 இந்தியப் பேனாநண்பர் பேரவை.மும்பை. 

+91 9892035187