"எங்கும் தமிழ், எதிலும் தமிழ் " கருத்தரங்கம் - பிப்ரவரி 2022
இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187
28. 02. 2022. திங்கள், மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரை............ நெதர்லாந்து சூரியத் தமிழ் தொலைக்காட்சி, தில்லி கலை இலக்கியப் பேரவை, ஜெட்லி சாதனைப் புத்தகம், தமிழ்நாடு இணைந்து வழங்கிய 164 மணி நேர உலக சாதனை நிகழ்வில் " மும்பை, இந்தியப் பேனாநண்பர் பேரவை " நண்பர்கள் பங்கேற்ற " எங்கும் தமிழ், எதிலும் தமிழ் " என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.
பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பேரவை நண்பர்கள் பாவலர் கருமலைத்தமிழாழன் {ஓசூர்}, பேராசிரியர் லோ. இராஜசேகரன் {இராணிப்பேட்டை}, கவிஞர் வினோத் பரமானந்தன் {இராஜஸ்தான்}, தமிழ்ச் செம்மல் அ.க.இராசு {ஓசூர்}, கவிஞர் ந. மீனாட்சி {கிருஷ்ணகிரி}, முத்து செல்வராஜா {சென்னை}, ஆர். நாகேந்திர கிருஷ்ணன் {கரூர்} ஆகியோர் அழகு தமிழில் ஆழமான சிந்தனைச் செருக்குடன் கருத்துரையாற்றினர்.
தில்லி மாநிலப் பேரவைக்கிளை அமைப்பாளர் ஆ. பிரமநாயகம் அவர்கள் நன்றியுரையாற்றி, பேரவையின் உலக சாதனைக் கருத்தரங்கை நிறைவு செய்தார்.
நிகழ்வில் பொதுச்செயலாளர் ஜெ. ஜாண் கென்னடி, துணைத் தலைவர் முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ், கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை ஒருங்கிணைப்பாளர் எ. நந்தகுமார், நண்பர்கள் அ. வேடி (ஓசூர்), சு. பாண்டிதுரை (அஸ்ஸாம்). மற்றும் ஏராளமான தமிழ்ச் சான்றோர்கள் இணைந்திருந்தனர்.
உலக சாதனை நிகழ்வை வெகுசிறப்புடன் ஒருங்கிணைத்து சரித்திரம் படைத்த தில்லி கலை இலக்கியப் பேரவை செயலாளர் பா. குமார் அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.