அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
புதுடில்லி மாநிலப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு - மாரச் 2022
  • புதுடில்லி
 இந்தியப் பேனாநண்பர் பேரவைக் குடும்ப உறவுகளுக்கு வணக்கம். 

இன்று {13.03.2022} காலை 11.45 மணிக்கு, புதுடில்லி மாநிலப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு தலைவர் தமிழ்த் திரு .மா.கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாநிலக் கிளை அமைப்பாளர் ஆ. பிரமநாயகம் வரவேற்புரையாற்ற, நண்பர் த. நாகராஜன், பேரவைச் சிறப்புகளையும், எதிர்காலத் திட்டங்களையும் எடுத்துரைத்து நிகழ்வின் நோக்கவுரையாற்றினார் பேரவைத் தலைவர் கடந்தகால சங்கம விழாக்களைப்  பட்டியலிட்டு வெள்ளிவிழா சங்கமம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

தீர்மானங்கள் :
1. பேரவையின் பொருளாதாரம் மேம்படும் வகையில் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தமது பிறந்தநாள் / திருமணநாள் சிறப்பினைப் பேரவைக் குடும்ப உணர்வுடன்  கொண்டாடும் வகையில் பேரவையின் சமூகநலப் பணிகளை ஊக்குவிக்க குறைந்தபட்சமாக ₹ 500/_ பேரவைக்கு வழங்க  வேண்டும். புதுடில்லி மாநிலப் பேரவைக்கிளை நண்பர்கள் முன்னுதாரணமாக விளங்கிட ஆர்வம் தெரிவித்தனர்.

2. புதிய நண்பர்களுக்கு பேரவையை அறிமுகப்படுத்தி உறுப்பினர்களாக இணைத்திட முயற்சிகள் முன்னெடுக்கப்படும்.
3. வெள்ளிவிழா சங்கமத்தில் புதுடில்லி நண்பர்கள் பங்கேற்பு அதிகமானதாக இருக்க வேண்டும். சங்கம சிறப்பு மலருக்கு அதிகமான விளம்பரங்கள் சேகரித்து அளிக்கவேண்டும்.

தீர்மானங்களுக்கு பேரவைத் தலைவர் ஒப்புதல் அளித்து பாராட்டினார். 

திருமதி உஷா வெங்கட் அவர்கள் நன்றியுரையாற்ற, அறுசுவை மதிய உணவுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
திரு.ஆர். திருஞான சம்பந்தம், முனைவர் தி. அருண் ராம் பிரசாத் ( தந்தை, மகன்) இருவரும் பேரவைக் குடும்ப உறவுகளாக இணைந்து விண்ணப்பங்களை பேரவை தலைவரிடம் அளித்தனர்.

நாளைய தினம் {14.03.2022} பிறந்தநாள் காணும் திருமதி உஷா வெங்கட் அவர்கள்  பிறந்தநாள் சிறப்பு நன்கொடையாக பேரவையின் சமுகநலப் பணிகளுக்காக  ₹ 500/_ பேரவைத் தலைவரிடம் வழங்கி ஆசி பெற்றார்.

புதுடில்லி இந்தர்புரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பேரவைத் தலைவர் அவர்களுக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
ஆ. பிரமநாயகம்,
அமைப்பாளர்.