வெள்ளிவிழா சங்கம நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், நேரில் சந்தித்து அழைப்பு - மாரச் 2022
இந்தியப் பேனாநண்பர் பேரவை, வெள்ளிவிழா சிறப்பு நிகழ்வில் { 21 மே 2022- சென்னை } பேரவையின் சிறப்பு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்க, வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வேந்தர் கோ. விசுவநாதன் அவர்களின் ஒப்புதல் பெற்ற தருணம் பேரவைத் தலைவர் மா. கருண், அறங்காவலர் முத்து செல்வராஜா, கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவை நண்பர் தமிழ்ச் செம்மல் அ.க. இராசு ஆகியோர் இணைந்திருந்தனர்.
***************************
பேரவையின் வெள்ளிவிழா சங்கம நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க, வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தரும், தமிழியக்கம் தலைவருமான கோ. விஸ்வநாதன், எழுத்துச் செம்மல் முனைவர் லேனா தமிழ்வாணன், பேரவையின் 2ஆவது நட்புச் சங்கம விழா { கோலார் தங்க வயல் - 1997 } சிறப்பு மலரைப் பெற்று வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் கு. வணங்காமுடி, வளர்தொழில், தமிழ் கம்யூட்டர் பத்திரிக்கைகளின் ஆசிரியரும், நமது 4ஆவது நட்புச்சங்கம விழா { கரூர்- 1999 } சிறப்பு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கியவருமான தன்னம்பிக்கைச் சுடரொளி க. ஜெயகிருஷ்ணன், ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு கொடுத்து ஒப்புதல் பெற்றோம். என்னுடன் அறங்காவலர் முத்து செல்வராஜா, சென்னை மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் ரெ. சுரேஷ், பேரவை நண்பர் மு. இளவேனில் பாரதி ஆகியோரும் இணைந்திருந்தனர்.