அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
76வது சுதந்திர தின விழா - ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் - ஜூலை 2022
  • மும்பை

நமது பெருமைக்குரிய இந்தியத் திருநாட்டின் 76வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இந்தியப் பேனாநண்பர் பேரவை, மும்பை நடத்தும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டிகள்.

உலகத் தமிழ் மாணவ, மாணவியர் அனைவரும் பங்கேற்கலாம்.

ஓவியப்போட்டி - தலைப்புகள்

1) 5ஆம் வகுப்பு வரை:

"வீட்டு விலங்குகள் / பூக்கள் / சுதந்திரப் போராட்ட வீரர்கள்"

2) 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை:

"மரம் வளர்ப்போம் ! மானுடம் காப்போம்"

3) 9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை:

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"

நிபந்தனைகள்:

1. A4 தாளில் வரைந்து, வண்ணம் தீட்டி அனுப்ப வேண்டும்.
2. வகுப்பிற்கு ஏற்ப அளித்துள்ள தலைப்புகளுக்கு தொடர்பில்லாத ஓவியங்களும், இணைய தளத்தில் இருந்து  பதிவிறக்கம் செய்த ஓவியங்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

==========================================

கட்டுரைப் போட்டி - தலைப்புகள்:

1) 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை:           

"வள்ளுவம் போற்றுவோம்"

2) 9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை:           

"வாசிப்பை நேசிப்போம்"

நிபந்தனைகள்:

1. கட்டுரைகள் பிறமொழிக் கலப்பின்றி  தமிழில் மட்டுமே எழுதப்பட வேண்டும்.

2. A4 தாளில் அதிகபட்சமாக இரண்டு பக்கத்திற்குள் எழுத வேண்டும்.

3. 24 வரிகளுக்கு குறையாமல் கட்டுரை இருந்திட வேண்டும்.

4. வகுப்பிற்கு ஏற்ப அளித்துள்ள தலைப்புகளுக்கு தொடர்பு இல்லாத கட்டுரைகளும், இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட  கட்டுரைகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

==========================================

பொதுவான நிபந்தனைகள்:

 1. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்கள் தங்களது பெயர், தந்தை பெயர், படிக்கும் வகுப்பு, பள்ளியின் முழுப் பெயர், ஊர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை தாளின் மேல் வலது பக்கத்தில் தவறாமல் எழுத வேண்டும். 

இந்த தகவல்கள் இல்லாத ஓவியங்கள் / கட்டுரைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

2. போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் இணையம் மூலம் அனுப்பி வைக்கப்படும். 

3. ஒரு போட்டியாளர்  ஒன்றுக்கு மேற்பட்ட ஓவியங்கள்/ கட்டுரைகள் அனுப்பக்கூடாது. 

4. பள்ளி ஆசிரியர்கள் தங்களது மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தி, அவர்களின் படைப்புகளைத் தொகுத்து அனுப்பி வைக்கலாம்.

5. முதல் மூன்று வெற்றியாளர்களின்  ஓவியங்கள் மற்றும் கட்டுரைகள்  இந்தியப் பேனாநண்பர் பேரவையின் 2023 நட்புச் சங்கம சிறப்பு மலரிலும், பேரவையின் இணையதளத்திலும் (www.indianpenpalsleague.org) இடம்பெறும். 

5. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பணப் பரிசுகள் காசோலையாக அனுப்பி வைக்கப்படும்.

6. ஓவியங்கள் மற்றும் கட்டுரைகள்  வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 31 ஜூலை 2022

==========================================

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க:

திரு.மா.கருண்,

நிறுவனர்-தலைவர்,+919892035187.

முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ். துணைத்தலைவர்.  +91 9442239500

திரு.ஆ. பிரமநாயகம், அமைப்பாளர். புதுடில்லி மாநிலப் பேரவைக் கிளை,  +91 9871133515.

திரு.எ.நந்தகுமார், இணைச் செயலாளர்,+919443397072.

திருமதி.ந.மீனாட்சி, செயற்குழு உறுப்பினர்,+919965217935.

ஆ. சங்கரநாராயணன், ஒருங்கிணைப்பாளர், கிருஷ்ணகிரி மண்டலம்,+919994652454.