இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187
புது தில்லி மாநிலக்கிளை
இந்தியப் பேனாநண்பா் பேரவையின் நிறுவனர் திரு மா கருண் அவர்களின் ஆலோசனையுடன், பேரவையின் விதிகளுக்குட்பட்டு தில்லி மாநிலப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு 25.06.2022 ஞாயிறு மாலை 3 மணியளவில் தில்லி பத்திரிக்கையாளர் சங்க அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மூத்த உறுப்பினரும், பேரவையின் நிதி பெருக்குக் குழு பொறுப்பாளருமான திரு. நாகராசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அமைப்பாளர் திரு ஆ.பிரமநாயகம் பேரவையின் சிறப்புகள் செயல்பாடுகள் எதிர்காலச் செயல் திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
புதிய நண்பர் திரு சுப்பிரமணியன் {சேலம்} அவர்கள் நமது பேரவையில் இணைவது தமக்கு பெருமை என்று தெரிவித்தார்.
கலந்து கொண்ட நண்பர்கள்:
திரு ப.இராமமூர்த்தி, திரு .திருஞானசம்பந்தம். முனைவர் அருண்பிரசாத்
திரு இளங்குமரன்
திரு இராசேந்திரன்
திரு சிவக்குமார்
திரு லெனின்
திருமதி மணிமேகலை.
திரு நாகராசன் வெள்ளி விழா சங்கம நிதியாக ரூ ஆயிரம் வழங்கினார்.
திரு லெனின் அவர்கள் நமது நன்றியுரையில், தில்லியில் நடைபெறவிருக்கும் 26 வது நட்புச் சங்கமம் [மே 2023 ] விழாவிற்கு எல்லோரும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார்.
சிற்றுண்டி தேனீருடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
அன்புடன்
ஆ. பிரமநாயகம், அமைப்பாளர்
புது தில்லி மாநிலப் பேரவைக்கிளை.
27.06.2022