இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.
மும்பை உறுப்பினர்கள் சந்திப்பு, 10. 07. 2022 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 மணிக்கு நமது தலைமை அலுவலகத்தில் பேரவைத் தலைவர் திருமிகு. மா. கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் ஜெ. ஜாண்கென்னடி வரவேற்றார்.
மாதந்தோறும் நண்பர்கள் சந்திப்பு நிகழ்வுகளை சிறப்புடன் நடத்தி பேரவைக்குப் பெருமை சேர்க்கும் கிருஷ்ணகிரி, திருச்சி, கன்னியாகுமரி மண்டலக் கிளைகளுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
மாவட்டக் கிளைகள் அனைத்தும் நண்பர்கள் சந்திப்பு நிகழ்வுகளை சிறப்புடன் நடத்தி தலைமைக்கு அறிக்கை அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.
பேரவை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள சுதந்திர தினவிழா, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் திரளான மாணவர்கள் பங்கேற்கும் வகையில் அனைத்து அமைப்பாளர்களும் செயல்பட கேட்டுக் கொள்ளப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், ஊரணிபுரம் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவி வாசினி அவர்களுக்கு ₹ 15000/.
மும்பை கால்சா கல்லூரி மாணவன் ஆரியன் பாஸ்கர் அவர்களுக்கு ₹ 20000/_.
மும்பை டூயூரியோ கான்வென்ட் மாணவி ஜீவியா சங்கர்த்தனா அவர்களுக்கு ₹ 8000/_.
மொத்தம் - ₹ 43000/_ ஆகிய கல்வி உதவித் தொகைகள் பேரவை சார்பாக வழங்கப்பட்டன.
வெள்ளிவிழா சங்கமச் செலவுகள் பற்றாக்குறைக்கு பங்களிப்பு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பேரவைத் தலைவர் தலைமையில் நண்பர்கள் சந்திப்பு நிகழ்வுகள் நடத்தவிருக்கும் திருச்சி மண்டலப் பேரவைக்கிளை { 17. 07. 2022 } கன்னியாகுமரி மண்டலப் பேரவைக்கிளை {24. 07. 2022 } நண்பர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
பொருளாளர் கோ. செல்வத்தம்பி நன்றியுரையாற்ற தேனீர் விருந்துடன் நிகழ்வு நிறைவுற்றது.