அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
கிருஷ்ணகிரி மண்டல நண்பர்கள் சந்திப்பு -ஜூலை 2022
  • கிருஷ்ணகிரி

இந்தியப் பேனாநண்பர் பேரவை கிருஷ்ணகிரி மண்டல நண்பர்கள் சந்திப்பு,   பேரவைத் தலைவர மனிதநேய மாமணி  மா.கருண் அவர்களின் அறிவுரைப்படி நட்புமிகு சி.சிவ.பிரேம்பிரகாஷ் துணைத்தலைவர் அவர்கள் தலைமையில், ஓசூர் சுவாதி பள்ளியில், 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

பேரவைத் தலைவர், மனிதநேய மாமணி  மா.கருண் அவர்கள்  காணொளி வாயிலாக இணைந்திருந்து உரையாடி சிறப்பித்தார். பேரவை நண்பர்கள் அனைவரும் தலைவரிடம்   உற்சாகமாக உரையாடி மகிழ்ந்தனர்.

அமைப்பாளர் திரு.மா. மோகன் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.

கூட்டத்தின் முக்கிய நிகழ்வுகள்:

சென்னை பேரவை நண்பர் திரு.K.குமார் அவர்களின் துணைவியார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜுலை மாதத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பேரவை உறவுகள் திரு.S. குழந்தை வேலு, திரு.S. ராஜன், திருமதி.S. ஜெயந்தி நந்தகுமார், திருமதி  திலகவதி பிரேம் பிரகாஷ் ஆகியோருக்கு  அன்புப் பரிசு அளித்து பேரவை சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பேரவைக் குடும்பத்தில இணைந்த  புதிய நண்பர் திரு.S. சிவகுமார் அவர்கள் சிறப்புடன்  அறிமுகம் செய்யப்பட்டார்..

இணைச்செயலாளர் திரு.எ.நந்தகுமார் அவர்கள் பேரவை வெள்ளிவிழா சங்கமத்தில் ஏற்பட்ட நிதி பற்றாக்குறைக்கு பங்களிப்பு அளித்த கிருஷ்ணகிரி மண்டல  பேரவை நண்பர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

76வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கான ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளுக்கு பேரவை உறுப்பினர்கள் தங்களுடைய குழந்தைகள் மற்றும் நண்பர்களின் குழந்தைகளையும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மாணவ, மாணவிகளுக்கு,  கிருஷ்ணகிரி மண்டலப் பேரவைக் கிளை நண்பர்கள் சார்பாக ₹ 10000/_ { ரூ. பத்தாயிரம் } மதிப்புள்ள புத்தகங்கள்  திரு. பழ. இரகுநாதன், (தலைமையாசிரியர்) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பிளிக்கல், அஞ்செட்டி வட்டம், தளி ஒன்றியம், கிருஷ்ணகிரி மாவட்டம்-635 102 அவர்களிடம் நன்கொடையாக அளிக்கப்பட்டது..

திரு.S.குழந்தை வேலு அவர்கள் பிறந்தநாள் நன்கொடையாக ரூ. 500 அளித்தார்.

திரு.V. நாகப்பன் அவர்கள், கிருஷ்ணகிரி மண்டலப் பேரவைக்கிளை சார்ந்த பணிகளுக்கு  அமைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளருடன் இணைந்து  உறுதுணையாகச் செயலாற்ற அங்கீகாரம் அளிக்க  தலைமையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

மண்டல ஒருங்கிணைப்பாளர் நன்றியுரையுடன் இனிப்பு வழங்கி  நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ்.

துணைத்தலைவர்.

மா.மோகன், கிளை அமைப்பாளர்.

ஆ.சங்கரநாராயணன், மண்டல ஒருங்கிணைப்பாளர்.

11. 07. 2022