அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
Humanitarian Services

எழுத்தால் இணைந்த இதயங்கள் அன்பு, நட்பு, மனிதநேயச் சிந்தனைகளைக் கடிதங்கள் மூலம் பகிர்ந்துகொண்ட நிலையில் பேரவையின் புதிய சகாப்தம் சமூகநல செயல்பாடுகள் என்று வளர்ச்சி பெற்று மராட்டியமாநில அரசு பதிவுச் சட்டப்படி சமூக நல அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்துநன்கொடைகளுக்கு வரி விலக்கு பெறும் வருமான வரித்துறையின் சான்றிதழ் (80G) பெற்று செயல்பட்டு வருகிறது.

மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்  காப்பகங்களுக்கு மனிதநேய உதவிகளுடன், மருத்துவத் தேவையறிந்து மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்கள் பேரவையின் சார்பாக தொடர்ந்து  வழங்கப்படுகிறது.

 

கண் மருத்துவப் பரிசோதனை முகாம், காது, மூக்கு தொண்டை மருத்துவப் பரிசோதனை முகாம், புற்றுநோய் விழிப்புணர்ச்சி முகாம், எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம், கண் தான விழிப்புணர்ச்சி முகாம், இரத்த தான விழிப்புணர்ச்சி முகாம் என மக்களின் தேவைகளை உணர்ந்து ஏராளமான முகாம்களை தொடர்ந்து நடத்திவருகின்ற பெருமையும் பேரவைக்கு உண்டு.

 

கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை மாணவ மாணவியரின் தரம் அறிந்து கல்வி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பான கல்வி அறிவு பெற்றும் மேற்படிப்பு படிக்க வசதியில்லாத மாணவ மாணவியருக்கு முழுமையான ஆண்டு கல்விக் கட்டணத்தை பேரவை ஏற்று கல்வி அளிப்பதும் பேரவையின் தொடர் கல்விப் பணிகளாகும். மருத்துவச்செலவுகளுக்காக வருந்தும் ஏழை மக்களின் வேண்டுகோள் பரிசிலீக்கப்பட்டு முடிந்த அளவுக்கு மருத்துவ உதவிக் தொகைகளும் அவ்வப்போது பேரவை சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

=============================================================================================================================================